பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஓரிரு தினங்களே மீதமிருக்கும் நிலையில் சமீபத்திய பிரமோவில் , பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருக்கிறார் மகத். அவரின் வரவால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஐஸ்வர்யா வழக்கத்துக்கு மாறாக சேட்டைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் வெறுப்பை அதிகம் சம்பாதித்தவர்களில் மகத்தும் ஒருவர்.
 
இவர் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கொண்டு மும்தாஜிடம் மிக மோசமாக நடந்துகொண்டதும், அவரை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதும் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேற மிக முக்கியமான காரணம். பிக் பாஸ் வீட்டில் வைத்து மிகவும் மோசமாக நடந்து கொண்ட மகத் வெளியே சென்ற பிறகு மும்தாஜ் மேடம் ஐ லவ் யூ என்று பாசமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

மொத்தத்துல எங்களை பைத்தியக்காரன் ஆக்கிட்டியேடா என்று அப்போது அவரை திட்டி தீர்த்தனர் பிக் பாஸ் ரசிகர்கள். தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் மகத்தின் முன்னால் ஐஸ்வர்யா எதோ ஒரு சண்டை காட்சியை நடத்தி காட்டுகிறார். 

அவர் தான் வெளியில வைத்து தினமும் பிக் பாஸ் சண்டையை பார்த்திருப்பாரே! இது கூட தெரியாத அப்பாவி பொண்ணா இருக்குது இந்த  ஐஸ்வர்யா. இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேறியது நல்லதா போச்சு. இந்த பிரச்சனைக்கு நடுவுல இங்க இருந்துருந்தா கண்டிப்பா ஒரு கொலை செஞ்சிருப்பேன். 

என கூறி இருக்கிறார் மகத். அந்த அளவுக்கு கோவக்காரரா மகத் என ஆச்சரியமடைந்திருக்கின்றனஎ பிக் பாஸ் ரசிகர்கள்.
இந்த பிரமோவின் போது யாஷிகா மகத் காதல் காட்சியை மீண்டும் நடித்து காட்டி அவரை கேலி செய்திருக்கிறார் ரித்விகா. மறுபடியும் பிராச்சிக்கு கோபம் வராமல் இருந்தா சரி தான்.