வல்லவன், வடகறி, மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மகத்.  கதாநாயகர்களுக்கு, நண்பன் மற்றும் சகோதரர் என குணச்சித்திர நடிகராக மட்டுமே நடித்து வந்த இவரால், கதாநாயகன் என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது இவரின் கதாநாயகன் கனவும் பலித்துள்ளது. தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போதே... தன்னுடைய காதலியை அனைவர்க்கும், அறிமுகப்படுத்திவிட்டு உள்ளே சென்றார். பின் பிக்பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா மற்றும் மகத் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. 

ஆரம்பத்தில் யாஷிகா மேல் உள்ளது காதல் இல்லை என மகத் மறுத்து வந்தாலும், பின் ஒரு கட்டத்தில், சூழ்நிலை காரணமாக அவரை காதலித்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து பிராட்சி மிஸ்ரா மிகவும் கோவமான வார்த்தைகளால் ட்விட்டர் பக்கத்தில் பதில் கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், காதலை பிராச்சியை சமாதானமாகப் பேசி தன்னுடைய காதலை மீண்டும் வளர்த்து வந்தார் மகத்.  இந்நிலையில் மகத்துக்கும், பிராச்சிக்கும் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

 இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. விரைவில் இவர்களுடைய திருமண தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் குறித்து அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.