பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தரப்பட்டிருந்த டாஸ்கில் ஓவ்வொரு போட்டியாளரும் இன்னொருவராக மாறி இருக்கின்றனர். யார் படம் போட்ட டீசர்டை அவர்கள் அணிந்திருக்கிறார்களோ அவர்களாகவே அந்த போட்டியாளர் மாற வேண்டும் . அவர்களின் நடவடிக்கைகளும் அந்த போட்டியாளர் போல தான் இருக்க வேண்டும். இந்த டாஸ்கில் மகத் மும்தாஜாக மாறி இருக்கிறார். 

இதனிடையே மும்தாஜை வெறுப்பேற்ற வேண்டும் என்று ஒரு சீக்ரட் டாஸ்கும் நீல நிற அணிக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெற மிக கேவலமான ஐடியாக்களை கொடுத்து வருகிறார் டேனியல். அதே போல டேனியின் பேச்சை கேட்டு செயல்படுகிறார் மஹத். 

இதில் மும்தாஜை கோபப்பட வைத்து அவரின் நிஜ குணத்தை வெளிப்பட வைக்க வேண்டும் என்பதற்காக மஹத் மிக கேவலமாக நடந்து கொண்டது பிக் பாஸ் ரசிகர்களை முகம்சுழிக்க செய்திருக்கிறது.

மும்தாஜ் போல நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் மோசமான முறையில் உடை அணிந்திருக்கும் மஹத் திடீரென தன்னுடைய பேண்ட்டில் ஏதோ சென்றுவிட்டது என கூறி அனைவர் முன்னிலையிலும் அதை கழட்டுகிறார். அவர் ஒரு பெண்வேடத்தில் இருப்பதை அறிந்தும் அவர் இப்படி நடந்து கொண்டது தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

அதிலும் இது சந்தர்ப்ப வசத்தால் நடக்கவில்லை மும்தாஜை கோபப்பட வைக்க வேண்டும் என திட்டமிட்டு இந்த செயலில் ஈடு பட்டிருக்கின்றனர் டேனியும் மஹத்தும். மும்தாஜ் பிக் பாஸ் வீட்டில் ஒரு முறை கூட மோசமான உடை அணிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் மகத் இவ்வாறு உடை அணிந்திருப்பது, அனைத்து பெண்களையுமே கேவலப்படுத்துவதற்கு சமம் என்று விமர்சித்திருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.