பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என பல ரசிகர்களால் அழைக்கப்பட்ட மயில் நடிகை தன்னுடைய மனதிற்கு நெருக்கமான கதையை தேர்வு செய்து இயக்குனர் அபிஷேக் வர்மா இயக்கத்தில் நடித்து வந்தார். 

இந்த படத்தில் இவர் பாதிக்கும் மேல் நடித்து முடித்து விட்ட நிலையில் திடீர் என மரணமடைந்தார் ஸ்ரீதேவி. இவர் இறந்ததால் இந்த படத்தை எப்படி முடிப்பது என படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

தற்போது கதையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, இந்த படத்தில் நடிக்க வைக்க பிரபல நடிகை மாதூரி தீக்ஷித்தை இயக்குனர் அணுகியதாகவும். அதற்க்கு மாதூரியும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது... 'அபிஷேக் வர்மா இயக்கி வரும் என் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமான படத்தில் மாதுரி நடிக்க சம்மதிதாதற்கு நன்றி என்றும் இதற்காக நான், அப்பா, குஷி ஆகிய மூவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.