தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் சர்கார் திரைப்படத்தினை வரவேற்றிட விஜய் ரசிகர்கள் அதிரடியாக தயாராகி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் பேசியது, சில தினங்களுக்கு முன்னால் ரிலீசான சர்கார் டீஸர் என எல்லா அதிரடி சம்பவங்களும் சேர்ந்து அவர்களின் வேகத்தை இன்னும் ஊக்கப்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே அரசியல்வாதிகளை எல்லாம் அதகளம் செய்யப்போகிறது இந்தப்படம் என சர்கார் குறித்து ஊடகங்களிலும் கருத்துக்கள் வெளியாகி இருந்தன. மேலும் அரசியலுக்கு எப்போது வருவார் நம்ம தளபதி என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, சர்கார் குறித்து வரும் எல்லா அப்டேட்டுகளுமே சந்தோஷத்தை தருவதாகவே அமைந்திருக்கிறது.

அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக மதுரை விஜய் ரசிகர்கள் அடித்திருக்கும் போஸ்டர் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சர்கார் படத்துக்காக ரசிகர்களாக இணைந்து அடித்திருக்கும் அந்த போஸ்டரில்” தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத ஆளுங்கட்சி, எதற்கும் உதவாத எதிர்கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி” என்று வசனம் இடம்பெற்றிருக்கிறது.

ஒரே போஸ்டரில் ஆளுங்கட்சி ,எதிர்கட்சி என இரண்டையும் விமர்சித்ததுடன், விஜயை அரசியலுக்கு அழைப்பது போல அமைந்திருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் வேலையாக இருந்தாலும் கூட மதுரை பக்கம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.