Jayam ravi :தீவிர ரசிகனின் மரணச் செய்தி கேட்டு ஓடோடி வந்த ஜெயம் ரவி.. குடும்பத்தினருக்கு செய்த மிகப்பெரிய உதவி
Jayam ravi : மதுரை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் செந்தில் என்பவர் உயிரிழந்துள்ளார்.
எடிட்டர் மோகனின் மகனான ஜெயம் ரவி, சினிமாவில் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், அகிலன், ஜன கன மன ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து அகிலன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தை பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற செப்டம்பர் 15ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகர் செந்தில் என்பவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த செய்தி அறிந்ததும் உடனடியாக செந்திலின் சொந்த ஊருக்கே சென்ற நடிகர் ஜெயம் ரவி, அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயம் ரவி, செந்திலின் உடன்பிறந்தவர்களுக்கான படிப்புச் செலவை முழுவதுமாக தானே ஏற்பதாக உறுதி அளித்தார். நடிகர் ஜெயம் ரவியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... தென்னிந்திய ரசிகர்கள் விசுவாசமானவர்கள்... ஆனால் வட இந்தியர்கள் அப்படி இல்லை - நடிகை தமன்னா சொல்கிறார்