தென்னிந்திய ரசிகர்கள் விசுவாசமானவர்கள்... ஆனால் வட இந்தியர்கள் அப்படி இல்லை - நடிகை தமன்னா சொல்கிறார்
Tamannaah : டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா, வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கல்லூரி படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன தமன்னாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறுகிய காலத்திலேயே விஜய் உடன் சுறா, அஜித்துடன் வீரம், தனுஷுடன் படிக்காதவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இதையடுத்து தமிழுக்கு முழுக்கு போட்டு பாலிவுட் பக்கம் சென்ற தமன்னாவுக்கு அங்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் தென்னிந்திய திரையுலகம் பக்கம் திரும்பிய அவருக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக இவர் நடித்த எஃப்3 எனும் தெலுங்கு படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா சங்கர் படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இவ்வாறு டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா, வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என தெரிவித்துள்ளார். தென்னிந்திய ரசிகர்கள் திரைக் கலைஞர்கள் மீது உணர்வுப் பூர்வமான பந்தம் ஒன்றை கொண்டிருப்பதாகவும், வட இந்தியாவில் அத்தகைய வரவேற்பு ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது” என தமன்னா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் நடத்திய சர்தார் படக்குழு... அதற்கான செலவு மட்டும் இத்தனை கோடிகளா?