அழகேசன் என்ற தொழிலதிபர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலா பால் சென்னை மாம்பலத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அழகேசனும், மற்றொரு தனியார் நிறுவன ஊழியரான பாஸ்கரன் என்பவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இதையும் படிங்க: இந்த கேவலமான போட்டோவுக்கு முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்... பிகினியில் கடுப்பேற்றிய மீரா மிதுன்...!

இருவர் மீதும் தொடரப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடிகை அமலா பால், தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாகவும், எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையும் படிங்க:கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம், அமலா பால் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.