மதுரை மேலூரை சேர்த்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நடிகர் தனுஷ் தான் எங்களுடைய மகன் என கூறி கடந்த சில வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில் ஒரு சில ஆதாரங்கள் தனுஷுக்கு சாதகமாக இருந்ததால் தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகன் என்று கூறி கதிரேசன், மீனாட்சி  வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும்  மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில் தாங்கள் தொடர்ந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த அத்தனை சான்றிதழ்களும் போலியானவை என்றும் அந்த ஆதாரங்களை வைத்து தான் தனுஷ் எங்கள் மகன் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் மீண்டும் இது குறித்து தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா குடும்பத்தினரிடம்  விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.