மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.  இந்த படத்துக்கு பிறகு இவருக்கு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில், விஜய்சேதுபதியுடன் 'காதலும் கடந்துபோகும்', 'கவண்', 'ஜூங்கா',  தனுஷுடன் 'ப.பாண்டி' ஆகிய படங்களில் நடித்தார்.  தற்போது 'கொம்பு வச்ச சிங்கமடா' என்ற படத்திலும் ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.

படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது...  நான் கதை தேர்வில், கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன் என்றார்.

இந்த நிலையில் இசை அமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, " சிலருடைய பக்கத்தில் இருக்கும் போது மட்டும் நாம் நாமாக இருக்க முடியும் அதுதான் உண்மையான சுதந்திரம் அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம் என்று பதிவிட்டுள்ளார்".

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மடோனா செபஸ்டியன் ஆபிரகாமும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன இதனை மடோனா இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.