Madhavan plays important role in Naga Chaitanya film

நாக சைதன்யா நடித்து வரும் ‘ஷவ்யாசாச்சி’ என்ற படத்தில் நடிகர் மாதவனும் இணைந்து நடிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மலையாள வெற்றிப் படமான ‘பிரேமம்’ படத்தை நாக சைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்தவர் இயக்குனர் சந்து மந்தேட்டி.

இந்தப் படத்தில் இவர்களுடன் ‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் ஆகியோரும் நடித்தனர்.

அந்தப் படத்தில் நாகார்ஜூனா, வெங்கடேஷ் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்தனர்.

இந்த நிலையில், மீண்டும் சந்து மந்தேட்டி இயக்கும் ‘ஷவ்யாசாச்சி’ என்ற படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. மேலும், இந்தப் படத்தில் மாதவன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நாயகியாக இந்தி நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார் என்பது கொசுறு தகவல்.