MaanaaduReview | நீண்ட நாள் கழித்து சிம்புவின் மாஸ் என்ட்ரி  என  ரசிகர்கள் மாநாடு குறித்த கொண்டாட்டத்தில் திரையரங்குகளை திணறடித்து வருகின்றனர். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25- ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் லைசன்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போவதாக சுரேஷ் காமாட்சி நேற்று மாலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அனைத்து திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஒருவழியாக அனைத்து திரையரங்குகளிலும் 7.30 காட்சி திரையிடப்பட்டுள்ளது.

காலை முதல் பட்டாசு பாலபிஷேகம் என மாஸ் காட்டி வந்த ரசிகர்கள் சிறப்பு காட்சி ரத்தால் சற்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும். படத்தின் டைட்டிலிருந்து படத்தின் முதல் பாதி வரை ஒவ்வொரு நொடியையும் வர்ணித்து தள்ளுகின்றனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…