Asianet News TamilAsianet News Tamil

வந்தான்.. சுட்டான்.. ரிப்பீட்டு..!! தெறிக்கவிடும் மாநாடு பட எஸ் ஜே சூர்யா டயலாக்

நீண்ட போராட்டதிற்கு பிறகு திரைக்கு வந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பு அபாரமாக உள்ளதாக பலரால் பாராட்டப்பட்டுள்ளது. படத்தில் அவர் கூறும் டயலாக் ”வந்தான்... சுட்டான்... ரிப்பீட்டு..!!” தற்போது டிரெண்டாகி வருகிறது.
 

Maanaadu movie Review
Author
Chennai, First Published Nov 26, 2021, 10:12 PM IST

சிம்பு நடித்த மாநாடு படம் தியேட்டர்களில் வெளியாகுமா ஆகாதா என்ற நீண்ட குழப்பத்திற்கு பிறகு ஒருவழியாக திரையரங்குகளில் மாநாடு படம் ரிலீசாகி உள்ளது. சிம்புவின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம், வில்லன் தோற்றத்தில் அனைவரையும் மிரள வைக்கிறார். ஒரு நாள் மீண்டும் மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்ப நடந்தால் மனநிலை எப்படி இருக்கும்? இந்த உலகத்தை எப்படி புரிந்து கொள்வது? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் டைம் லூப் என்ற கான்செப்டுடன் இந்த மாநாடு படம் உருவாகியுள்ளது.

Maanaadu movie Review

நடக்கப்போவது எல்லாம் முன்னரே தெரிந்துவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவே திரைப்படமாக வந்தால் ? இயக்குனர் வெங்கட்ப்ரபு இயக்கத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா இணைந்து மிரட்டும் தமிழ் திரைப்படமாக மாநாடு வந்து உள்ளது .எஸ் ஜே சூர்யாவுடைய மிக அற்புதமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது இந்தப் படத்திற்கு பக்கபலமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் எஸ் ஜே சூர்யா என்றுதான் சொல்லியாக வேண்டும். படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் யுவன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். சிம்பு வரும் பலதரப்பட்ட காட்சிகளுக்கு பலவகையில் பிஜிஎம் கொடுத்து அசத்தியுள்ளார். 

Maanaadu movie Review

மேலும் வெங்கட் பிரபுவின் நகைசுவை கலந்த வசனங்கள் ரசிகர்களை கட்டி போட்டு வைக்கும்படி உள்ளது. ஒரு காட்சியில் எஸ்.ஜே சூர்யாவை குறிப்பிடும் விதமாக ”அவன் உன்னை விட ஓவர் ஆக்டிங் பண்றான்” என்று சிம்பு சொல்லும் வசனத்திற்கு திரையரங்கம் அதிரந்தது.  நக்கல் கலந்த பாணியில் எஸ்.ஜே சூர்யாவின் வில்லதனம் பார்ப்போரை கவர்ந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios