கடந்த வாரம் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி, இரட்டை அர்த்தத்தில் மோசமான வார்த்தைகளால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என இந்த சம்பவம் குறித்து தங்களுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் மெர்சல், சர்கார் போன்ற திரைப்படங்களில் தனது அதிர வைக்கும் பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்த, பாடலாசிரியர் விவேக். ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

அதில், நான் என் மனைவியிடம்  ‘பொண்ணுன்னா கும்புடுற மாதிரி இருக்கணும் கூப்புடுற மாதிரி இருக்க கூடாது’ னு அவரு செல்லிட்டாரு மா... 

என் மனைவி என்னிடம்  ’ஆண் னா கும்புடுறவனா இருக்கணும் கூப்புடுறவனா இருக்க கூடாது’ என்பது போல் கூறியதாகவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் செம்ம பதிலடி என கூறி ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.