தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாகவும் கூறப்பட்டது. 

அங்கு வைரமுத்துவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருதய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் தீயாய் பரவியது. இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மிகுந்த பதற்றமடைந்தனர்.இதனிடையே,  வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்த அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனை வந்துள்ளதாகவும், கவிப்பேரரசு நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க: பட்டு பாவாடை சட்டையில் ‘குட்டி’ நயன் அனிகா... மிடுக்கான போஸில் மிரள வைக்கும் போட்டோஸ்...!

தற்போதைய தகவலின் படி, காலை தனியார் மருத்துவமனைக்கு சென்ற கவிஞர் வைரமுத்து வழக்கமான பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அரைமணி நேரத்திலேயே வீடு திரும்பிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.