Actor Marimuthu Death : சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது என்று மாரிமுத்துவின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.. அவருக்கு வயது 57. எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிரபல நடிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேனியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பசுமைத்தேரி என்ற குக்கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். பின்னர் ஒரு ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த அவருக்கு கவிஞர் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது.

“சாப்பிட காசு இல்ல.. 3 நாட்கள் ஊறுகாய் மட்டும் தான் சாப்பிட்டேன்” மாரிமுத்துவின் பழைய பேட்டி வைரல்

இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்ததால் வைரமுத்து உடன் நெருக்கமானார் மாரிமுத்து. பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மாரிமுத்து, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். மேலும் மணி ரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் அவர் இயக்கி உள்ளார். பின்னர் நடிப்பதில் கவனம் செலுத்திய மாரிமுத்து, பல படங்களி துனை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். எனினும் அவர் சன் டிவி ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் வெகு பிரபலமானார். குணசேகரனாக தனது இயல்பான நடிப்பு, மிரட்டலான வசனங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்தார் மாரிமுத்து. இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில் “ தம்பிமாரிமுத்துவின்மரணச்செய்திகேட்டுஎன்உடம்பு ருகணம்ஆடிஅடங்கியதுசிகரத்தைநோக்கிச்சென்றுகொண்டிருந்தவனைமரணத்தின்பள்ளத்தாக்குவிழுங்கிவிட்டதுஎன்கவிதைகளின்உயிருள்ளஒலிப்பேழைஅவன்என்உதவியாளராய்இருந்துநான்சொல்லச்சொல்லஎழுதியவன்தேனியில்நான்தான்திருமணம்செய்துவைத்தேன்இன்றுஅவன்மீதுஇறுதிப்பூக்கள்விழுவதுகண்டுஇதயம்உடைகிறேன்குடும்பத்துக்கும்கலைஅன்பர்களுக்கும்கண்ணீரைத்துடைத்துக்கொண்டேஆறுதல்சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…