வாரிசுகளை வரவேற்ற சினேகன் - கன்னிகா! வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
Lyricist Snehan Kannika: பாடலாசிரியர் சினேகன்-கன்னிகா தம்பதியினர் தங்கள் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்ததைக் கேக் வெட்டி கொண்டாடி, நர்ஸ்களுக்குப் பரிசளித்துள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை முதல் முறையாக உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
குழந்தைப் பிறப்பின்போது கன்னிகாவை கவனித்துக்கொண்ட நர்ஸ்களுக்கு சினேகன் - கன்னிகா இருவரும் பரிசுகள் வழங்கினார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோவை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
ரஜினி கன்னட சினிமாவை கைவிட்டது ஏன்? நடிகர் அசோக் சொன்ன சீக்ரெட்!
தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை வழங்கிய பாடலாசிரியர் சினேகன். மறக்க முடியாத பல பாடல் வரிகள் மூலம் ரசிகர்களில் மனங்களில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு தனது காதலியான நடிகை கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார். அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன் மிகவும் பிரபலமானார்.
இதனிடையே, கர்ப்பமாக இருந்த சினேகனின் மனைவி கன்னிகாவுக்கு ஜனவரி 25ஆம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. சில தினங்களுக்கு முன் குழந்தைகளைக் கையில் ஏந்திய தருணத்தை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இப்போது தங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதனை கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சினேகன் - கன்னிகாவும் குழந்தைகளுக்கும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
20 வருடங்களாக ரகசிய தியானம் செய்யும் ரஜினிகாந்த்; காரணம் என்ன தெரியுமா?