‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் காந்துகொள்ளும்படி எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் நடத்தை பிடிக்காததால் செல்வதற்கு மிகவும் தயக்கமாக உள்ளது’என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு பங்கு பெற்றுக்கொண்டிருக்கும் விருந்தினர்களை பகிரங்கமாக மட்டம் தட்டியிருக்கிறார் கவிஞரும், கதாநாயகனும், கமல் கட்சியின் வேட்பாளருமான சிநேகன்.

கட்டிப்பிடி வைத்தியத்தில் கைதேர்ந்தவரான பாடலாசிரியர் சிநேகன் சமீபத்தில் ‘பொம்மி வீரன்’படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். கமலுக்கு மிகவும் நெருக்கமானவரான இவர் பிக்பாஸ் முதல் சீஸனில் கலந்துகொண்டார். அடுத்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இன்னும் மூன்றே வாரங்களில் முடிவுக்கு வரவிருக்கும் பிக் பாஸ் மூன்றாவது சீஸன் நிகழ்ச்சிகள் முந்தைய இரண்டு சீஸன் நிகழ்ச்சிகளை விட கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி தொடர்களில் வரும் அபத்தக் காதல்களோடு போட்டியிடும் காதல் சமாச்சாரங்கள், அடிக்கடி காவல் நிலையத்தில் புகார்கள், வனிதாவின் ஓவர் அட்ராசிட்டி என்று நிகழ்ச்சி தனது தரத்தை மிகவும் குறைத்துக்கொண்டதாக விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் இந்த விமர்சனங்களை நியாயப்படுத்தும் வலையில் கவிஞர் சிநேகனும் தனது ட்விட்டர் பக்கத்தில்,...கவிஞர் சினேகன்@Kavignar_Snehan #பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது...என்று பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவுக்குக் கீழே எண்ணற்ற கமெண்டுகளில் அவரை போகவேண்டாம் என்று தடுக்கிறார்கள். Chithu @chithu_chithu5 Replying to @Kavignar_Snehan..நீங்கள் அங்கே போகவேண்டாம்
 உள்ள இருக்கிறதுகள் game விளையாட வில்லை, அவர்கள் காதல் காமம் என்று  வேற வருத்தத்தில்  இருக்கிறார்கள், நீங்கள் என்ன  சொன்னாலும் உரசிக்கொண்டு திரியிறதை  நிறுத்தாதுகள், தயவு செய்து உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள் அண்ணா 🙏🙏🙏