தங்களது நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் 37 நாட்களில் படத்தை முடிப்பேன் என்று  ஆர்வக்கோளாறாகப்பேட்டி தந்த இயக்குநரை லைகா நிறுவனம் எச்சரித்துள்ளது. 

ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன்அடுத்து இயக்கிய ’நரகாசூரன்’ படம் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. அடுத்து ஆரம்பித்த ’நாடகமேடை’ என்ற படமும் டேக் ஆஃப் ஆகவில்லை.இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து அவரை கைதூக்கிவிட்டிருக்கிறார் லேசாக மார்க்கெட் உயர்ந்த நிலையில் இருக்கும்  அருண் விஜய்.

பிரசன்னா வில்லனாக நடிக்கும் இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.‘மாஃபியா’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது. மாஃபியா படத்தின் படப்பிடிப்பை 37 நாட்களில் முடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இன்றைய சூழ்நிலையில் 37 நாட்களுக்குள் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சவாலான விஷயம். ‘மாஃபியா’ படத்தை 37 நாட்களுக்குள் எடுப்பதன் மூலம் அந்த சவாலை எதிர்கொள்ளப்போவதாகத் திட்டமிட்டுள்ளார்.இதற்கிடையில் இயக்குனர் கார்த்திக் நரேனின் ‘37 நாட்கள்’பேட்டியால் அதிருதி அடைந்துள்ள லைகா நிறுவனம் அவரை அழைத்து ‘37 நாட்களுக்குள் படம் எடுக்கும் தகவல் கம்பெனி ரகசியம். அதை வெளியே சொன்னால் நாங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்க முடியாது. இனிமேல் இதுபோன்ற பேடிகளைத் தவிர்க்கவும். இல்லையேல்...?என்று லெஃப்ட் அண்ட் ரைக்ட் வாங்கி அனுப்பினார்களாம்.