கடந்த வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில், இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது... கிரேன் சரிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 'இந்தியன் 2 ' படத்தின் இயக்குனர், ஷங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள குற்ற பிரிவு போலீசார் நடத்திய 3 மணிநேர விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்நிலையில் லைக்கா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன், சென்னை உயர்நீதி மன்றத்தில், முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை அதிரடியாக மார்ச் 2-ஆம் தேதி உயர்நீதி மன்றம் ஒதுக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.