Asianet News TamilAsianet News Tamil

"ஷங்கர் மீது லைக்கா தொடுத்த வழக்குகள் ரத்து!"- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
 

Lyca filed against Shankar that case is canceled
Author
Chennai, First Published Jul 2, 2021, 2:48 PM IST

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

Lyca filed against Shankar that case is canceled

இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதால், இயக்குனர் ஷங்கர் ராம் சாரணை வைத்து இயக்க உள்ள படம் குறித்தும், அதை தொடர்ந்து.... விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான, 'அந்நியன்' படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

Lyca filed against Shankar that case is canceled
மேலும் இந்த படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் லைக்காவின் மனுவில் தெரிவிக்கப்பட்டு மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, விசாரணைக்கு வந்த போது,   'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதி பதிகள் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாகவும். அதே நேரத்தில் ஷங்கர் தரப்பு நியாத்தை கேட்காமல் தீர்ப்பு வழங்க முடியாது என தெரிவித்து,  இந்த வழக்கின் விசாரணை ஜூன் 4  தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.

Lyca filed against Shankar that case is canceled

இதையடுத்து தற்போது இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள தகவலில்... இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு லைகா நிறுவனம் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்றவையும்  படப்பிடிப்பு தாமதமாக காரணங்களாகும் என ஷங்கர் கூறினார்.

Lyca filed against Shankar that case is canceled

அதே போல் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்  படத்தின்  பட்ஜெட்டை ரூ 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதமப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சாதகமான சூழலும் ஏற்பட்டால் படத்தை முடித்து தர தயாராக இருப்பதாகவும் ஷங்கர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இடைக்கால உத்தரவு கோரிய மனுக்கள் மீது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்து, லைகா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios