ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர் ஸ்டாரின் மாஸ் எண்டர்டெயின்மென்ட்டை காண ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பியுள்ளன.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகு... புன்னகை அரசி சினேகாவின் பட்டாஸ் கிளப்பும் புகைப்பட தொகுப்பு...!

'ஆதித்யா அருணாச்சலம்' என்ற மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது. சினிமா ஐ.சி.யு.வில் இருக்கும் இந்த வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிய வைத்த அதகளமே "தர்பார்".  முதல் பாதி, இரண்டாம் பாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் படம் சூப்பராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

'தர்பார் அவ்வளவு தான்', 'தியேட்டர்களில் எல்லாம் கூட்டமே இல்லை'. 'ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களை ஏமாத்திட்டார்' போன்ற புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லைகா நிறுவனம் "தர்பார்" படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தர்பாருக்கு வேட்டு வைக்கும் "பட்டாஸ்"... மாமனார் இடத்தை பிடிக்க திட்டம் போடும் தனுஷ்...!

இதுகுறித்து லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், யார் வேணும்னாலும் விளையாடலாம்... ஆனால் சிம்மாசனம் எப்போதும் பேரரசருக்கு மட்டும் தான் என சூப்பர் ஸ்டாரை செம்மையாக புகழ்ந்து ட்வீட் செய்துள்ளது. மேலும் கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் தர்பார் திரைப்படம் 150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.