love failures of namitha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு ஏற்பட்ட மூன்று காதல் தோல்விகள் குறித்து நடிகை நமிதா சுவராஸ்யமாக தெரிவித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில், தினசரி நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 2 ஆம் நாளான நேற்று, கலந்து கொண்ட அனைவரும் அவரவரது முதல் காதலைப் பற்றி கூறியது சுவராஸ்யமாக இருந்தது.

அதில், நடிகை நமிதா, தமது அனுபவத்தைக் கூறும்போது, என் வாழ்க்கையில் 3 முறை காதல் வயப்பட்டேன். அத்தனையும், தோல்வியில் முடிந்தது.

அதை மறக்க நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்தார். முதல் காதல் தன்னுடைய பள்ளி பருவத்தில் ஏற்பட்டதாகவும், அப்பொழுது மகாபாரதம் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் அதில் வரும் கிருஷ்ணர் பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் மீது தான் காதல் கொண்டதாகவும், அவருடைய கம்பீரம் அவருடைய அறிவுரைகள் பார்த்து தான் மயங்கிப் போனதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்ததாகவும் கூறினார்.

வீட்டில் உள்ளவர்கள், கிருஷ்ணர் மீது வைத்திருப்பது பக்தியினால் வந்த இனக்கவர்ச்சி என்று சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்னர், என் தாத்தா கிருஷ்ணர் பொம்மை ஒன்றை வாங்கி வந்து, மந்திரம் ஓதி திருமணம் செய்வதுபோல் செய்து வைத்தார். அதன் பின்னர் நான் கிருஷ்ணரின் மனைவி என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

அதன் பின்னர், பள்ளி பருவத்தில் ஒரு காதல் வந்தது. அதுவும் முறிந்தது. மூன்றாவது காதல் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. இதையெல்லாம் மறப்பதற்கு நான் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

குஜராத் தாய் மண் என்றாலும ஆங்கிலம்தான் எனக்கு எளிதாக வரும் என்பதால் ஆங்கிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை எழுதியுள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் மற்றவர்கள், அவரவர்கள் காதலைப் பற்றி கூறினர்.