நேற்றைய தினம் எதிர் பார்த்ததை விட படு ஜோராக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆனால் இன்றோ கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறிய ஆக வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் விதி. மேலும் இன்றைய தினம் வெளியேற போவது யார் என தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... கமல், லாஸ்லியாவிடம் யாரை காப்பாற்ற நினைக்கீறீர்கள் என கேட்க. லாஸ்லியா, கவின் மற்றும் சேரன் என இருவர் மீது கை வைக்கிறார்.

இதனால் கமல் செம்ம ஷாக் ஆகிறார். "பின் என்னை இங்க சொல்ல சொன்னது யாரை காப்பாத்த நினைக்கிறீர்களோ அதை சொல்லி விட்டு வாங்க என்று. அதை செய்யாமல் நான் தான் இவங்க கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருக்கேன் என புலம்பி விட்டு, எதை சொல்லவந்தோமோ அதை சொல்லிவிட்டு பட்டுனு அடுத்த வேலைய பார்க்கலாம் இல்ல, புரோகிராம் டைம்னு ஒன்னு இருக்குல்ல என கூறி, கமல் கண் அடிக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

நேற்றைய தினம் எப்படி முதல் ப்ரோமோவில், எலிமினேஷன் பற்றி பேசினாரா அதே போல் இன்றைய ப்ரோமோவிலும் குருநாதர், எலிமினேஷன் பற்றிய பேச்சிலேயே துவங்கியுள்ளார்.

அந்த ப்ரோமோ இதோ...