பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.  இத்தனை நாள் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் ஒதுங்கியே இருந்த லாஸ்லியா, தற்போது ஒரு புது பிரச்சனை உருவாக காரணமாக மாறியுள்ளார்.

நேற்றைய தினமே கவின் லாஸ்லியாவுடன் அதிக நேரம் செலவிடுவதாகவும், அவருடன் மட்டுமே பேசுவதாகவும் கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சாக்ஷி.  இதைதொடர்ந்து இன்று வெளியாகியுள்ள புரோமோவில், கவினுக்கு கஷ்டமான ஒரு டாஸ்க் கொடுக்கிறார் லாஸ்லியா.

அதாவது இன்று ஒருநாள் முழுவதும் தன்னை பார்க்க கூடாது என்றும் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இதற்கு கவின் வச்ச கண்ணு வாங்காம பார்க்க வேண்டும் என்றால் சொல்லு பாக்குறேன். இதை எப்படி டாஸ்காக ஏற்று கொள்ள முடியும் என கேட்கிறார். இவர்கள் இருவரும் பாத்ரூமில் பேசிக்கொண்டிருக்கும் போது மீரா மிதுனம் அதே இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே ஒரு பக்கம் கவின் லாஸ்லியாவிடம் அதிகம் பேசுவதை ஏற்றுக்கொள்ளாமல் முடியாமல் தவிக்கும் சாக்ஷிக்கு, இது எந்த விதமான பிரச்சனையை ஏற்படுத்தும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே போல் லாஸ்லியாவை காதலிப்பது போல் சுற்றி வரும், கவினின் காதல் விஷயத்தில் லாஸ்லியா வழிய சென்று எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது இந்த ப்ரோமோ.