பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளர்களில் ஒருவரான உள்ளவர் லாஸ்லியா. இவரை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக லாஸ்லியா பற்றி எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, லாஸ்லியா பற்றி அவருடைய தோழிகள் போன் மூலம் பகிர்ந்து கொண்டனர். அப்போது லாஸ்லியா மிகவும் ஜாலியான பெண். அவர் சாண்டி மாற்றும் மற்றவர்களுடன்  விளையாடும் போது, தங்களிடம் எப்படி பழகினாலோ அதே போல் தான் அங்கும் உள்ளது தெரிகிறது என லாஸ்லியா பற்றி பெருமையாக பேசினார்.

லாஸ்லியாவை தவிர பிக்பாஸ் வீட்டில் யாரை பிடிக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோரை பிடிக்கு என கூறியுள்ளனர் லாஸ்லியாவின் தோழிகள்.