பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் ஓவியா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது லாஸ்லியா உள்ளே நுழையவுள்ளதாக தகவல் சொல்கிறது..
டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது..பிக்பாஸ் ரசிர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக 24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது...இதனால் பல சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது.
சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். இதில் சுரேஷ், சுஜா, ஷாரிக், அபிநய் எலிமினேஷன் செய்யப்பட்டனர்..இவர்களில் சுரேஷ் கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் திரும்பி வந்துள்ளார்..

இதற்கிடையே எப்போதும் அனைவர் மீதும் கடும் கோபத்தை புழிந்து வந்த வனிதா திடீர் என தானாக வெளியேறிவிட்டார்..இவருக்கு பதில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு சதிஷ் உள்ளே வந்துள்ளார்..அவருக்கு தடபுடலாம் வரவேற்பு அளிக்கப்பட்டது..

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா..வைல்ட் கார்டு என்ட்ரியாவது கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்..இந்நிலையயில் புதிய ட்வீஸ்ட்டாக லாஸ்லியா வைல்ட் கார்டு என்ட்ரியா உள்ளே வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..கமலுக்கு பதில் தொகுப்பாளராக களமிறங்கும் இரண்டாவது வாரம் இது..

இந்த வாரம் எக்கச்சக்க களேபரம் காத்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்..ஏற்கனவே ஸ்மோக்கிங் ரூம் சர்ச்சை, நாட்டாமை டாஸ்க் கோளறுபடிகள் என ஏகபோக பிரச்னைகளுக்கு எவ்வாறு சிம்பு தனது ஸ்டைலில் தீர்ப்பு சொல்ல போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்..கடந்த வாரம் போட்டியாளர்களுடன் உரையாடுவதிலேயே பாதி நேரம் சென்றுவிட்டதால்..இந்த வாரம் கொஞ்சம் காரசாரம் இருக்குமென காத்திருப்போம்...
