பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கிராமத்து கலையை கற்றுக்கொடுக்கும் நோக்கமாக, நேற்றைய தினம் பொம்மலாட்டம் பற்றி கற்று கொடுக்கப்பட்டது. பின் ஹவுஸ் மேட்சும் தாங்கள் கற்று கொண்ட பொம்மலாட்டத்தை செய்து காட்டி பாராட்டுகளை பெற்றனர்.

இதை தொடர்ந்து இன்று, கிராமிய கலைகளில் ஒன்றான கூத்து பற்றி சொல்லிக்கொடுக்கப்படுவது இன்றைய ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இரண்டு கிராமமாக தற்போது பிக்பாஸ் வீடு பிரிந்துள்ளதால், இரு அணியினரும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சேரன் கோமாளி வேடம் போட்டு கொண்டு வந்தனம்...  வந்தனம்... என கூறி, பாடல் பாடுகிறார். இதை தொடர்ந்து. வனிதா எம தர்மன் வேடம் போட்டு கொண்டு, எங்கே சித்திரகுப்தன் என கேட்க, பெண் வேடம் போட்டுள்ள சாண்டியை ஓடி வந்து இடித்து தள்ளுகிறார் லாஸ்லியா. சாண்டி... சுருண்டு கீழே விழும் காட்சி இந்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதில் ஏதாவது சாண்டிக்கு அடி பட்டதா என இன்றைய தினம் தான் தெரியவரும்.