கிராமத்து டாஸ்கை சுவாரஸ்யமாக செய்யவில்லை என்கிற காரணத்திற்காக , லாஸ்லியா மற்றும் அபிராமி ஆகியோர் இந்த வாரம் ஜெயிலுக்கு அனுப்பபடுகிறார்கள்.

கடந்த சில தினங்களாக கிராமத்து கலாச்சாரம், வேஷ்டி, கண்டாங்கி சேலை, என பிக் பாஸ் வீடே குட்டி கிராமமாக மாற்றி விட்டனர் போட்டியாளர்கள். அதிலும் குறிப்பாக கிராமத்து கதாபாத்திரங்களான, நாட்டாமை , ஊர் தலைவி, சமையல் கிழவி, அவருடைய மகன், மருமகள் ,ஜோசியக்காரி, மைனர் குஞ்சு என அனைவருக்கும் பிக்பாஸ் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை கொடுத்து நடிக்கவைத்தார்.

அவர்களும் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தனர். இதில் சிறந்து விளங்கிய மீரா, தர்ஷன், மூக்கின் ஆகியோர் இந்த வார தலைவர் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆனால், சொன்ன வேலைகளை மட்டும் இன்றி அதிகமாகவே குறும்பு செய்துவிட்டேன். அதனால் நான் ஜெயிலுக்கு போக ரெடியாக இருக்கிறேன் என புதிய குண்டை தூக்கி போட்டார் லாஸ்லியா. ஆனால், சுவாரஸ்யம் குறைவாக இந்த டாஸ்கை செய்தவர்கள் ஷெரின் மற்றும் சாக்ஷி என மீரா மற்றும் கவின் கூறிய போதும் பெரும்பான்மையானோர் லாஸ்லியா மற்றும் அபிராமி பெயரை கூறியதால் இந்த வாரம் இவர்கள் இருவரும் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளனர்.