மற்ற நாட்களை விட கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் நாட்களில், அதிகமாகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம், கமலின் எடக்கு முடக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல  முடியாமல் திணறுவார்கள். மேலும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளை பொதுமக்கள் பார்வையில் இருந்து கமல் கேட்பார் என்கிற நம்பிக்கை தான்.

முதல் ப்ரோமோவில், எடுத்ததுமே எவிக்ஷன் பற்றி பேசிய கமல். இரண்டாவது ப்ரோமோவில்,த்ரிஷாவாக மாறி, லாஸ்லியா நடிகர் கமலஹாசனிடம் 'மன்மதன் அம்பு' படம் குறித்த கேள்வியை கேட்பது இடம்பெற்றுள்ளது.

இதில் லாஸ்லியா... "ஹாய் கமல் சார், நான் த்ரிஷா பேசுறேன், என வெக்கப்பட்டு சிரிக்கிறார். பின் கமல் சொல்லுங்கள்,  என கேட்டதும், நீங்களும் நானும் 'மன்மதன் அம்பு' படத்தில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். அதில் 'நீ நீல வானம் என ஒரு பாட்டு இருக்கு' அது ரொம்ப வித்தியாசமா இருக்கும் . அதில் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்கள் என கூறுகிறார்.

இவர் இந்த கேள்வியை கேட்டதும். இன்னும் நீங்கள் அந்த காதல் மூடில் இருந்து அகலவில்லை என தெரிகிறது என  செம நோஸ் கட் கொடுத்தார். இதனை கேட்டதும் அரங்கமே கைதட்டுகிறது. 

இதை வைத்து பார்க்கையில், முக்கோண காதலை வைத்து, சாக்ஷி, கவின், லாஸ்லியா என மூவரையும் இன்றும் வச்சி செய்வார் கமல் என்பது உறுதி.