பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, ரசிகர்களின் மிக பெரிய ஆதரவை பெற்றவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், திடீர் என பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கவின்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, இறுதி வரை சென்று மூன்றாவது இடத்தை மட்டுமே பிடித்து வெற்றி பெரும் வாய்ப்பை இழந்தார். 

பிக்பாஸ் இறுதி சுற்றியில் லாஸ்லியா கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் கவின் என லாஸ்லியாவே பல முறை கூறி இருந்தார்.

மேலும் இவர்கள் இருவரும் உள்ளே இருந்தபோது, காதலிக்க துவங்கி விட்டதாக பல தகவல்கள் பரவியது. இதனை உறுதி செய்வது போல், பல முறை தங்களுடைய செயல்களிலும் இருவரும் வெளிப்படுத்தினர் என்பது நாம் அறிந்தது தான்.

இது ஒரு புறம் இருக்க, விஜய் டிவி சீரியலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி, கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்ற , 'ராஜா ராணி' சீரியலின் இரண்டாம் பாகத்தில், லாஸ்லியா மற்றும் கவின்னை நடிக்க வைக்க தற்போது முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கவின், சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரையில் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டதால், மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஒற்று கொள்வாரா என்பதும், அதே போல்... லாஸ்லியா நடிக்கும் முடிவில் இருக்கிறாரா என்பதும் இனி தான் தெரியவரும். அதே போல் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என இது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.