இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களிலும், இவர் இயக்க உள்ள 'விக்ரம்' படத்திலும் பணியாற்றிவரும் படத்தொகுப்பாளர் திருமணத்திற்கு லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களிலும் எடிட்டராக பணியாற்றியுள்ளவர் ஃபிலோமின்ராஜ். இவருக்கும், இவரது காதலி திவ்யா பிரதீபா என்பவருக்கும் இன்று, சர்ச்சில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் இந்த தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, " இன்று முதல் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பிலோமின்ராஜ் - திவ்யா பிரதீபா ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களுடைய புதிய பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எடிட்டர் ஃபிலோமின்ராஜ், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்கள் மட்டும் இன்றி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை செய்த 'ராட்சசன்' உள்பட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார். மேலும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் படத்திலும் இவர் தான் எடிட்டராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…