தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தன்னிடம் விஜய்க்காக இரண்டு கதைகள் இருப்பதாக கூறி இருக்கிறார்.

Lokesh Kanagaraj Upcoming Movies : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மாஸ்டர், மாநகரம், விக்ரம், லியோ, கைதி என அவர் இயக்கிய 5 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதையடுத்து அவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

லோகேஷின் அடுத்தடுத்த படங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்பதை பற்றி கூறி உள்ளார். அதன்படி கூலி முடித்ததும் கைதி 2 படத்தை தான் இயக்குவேன் என கூறி உள்ள லோகேஷ், அது முடித்ததும், விக்ரம் 2 படத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அதற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லை என லோகேஷ் கூறி உள்ளார். பின்னர் லியோ 2 படத்தை இயக்குவேன் என கூறி உள்ள அவர், சூர்யாவுடன் ரோலெக்ஸ் என்கிற படமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு 2 படங்கள்

அதேபோல் நடிகர் விஜய்க்காகவும் தன்னிடம் இரண்டு படங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளார் லோகேஷ். அனைவரும் லியோ 2 படத்துக்கு ஆர்வம் காட்டி வந்தாலும், தான் மாஸ்டர் 2 படத்தை எடுக்க விரும்புவதாக கூறி உள்ளார் லோகேஷ். இதற்கான ஐடியாவும் தன்னிடம் இருப்பதாக கூறிய அவர், விஜய்க்கும் அந்த ஐடியா பிடித்திருந்ததாக கூறி உள்ளார். ஆனால்; விஜய்யின் அரசியல் எண்ட்ரியால் அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. இருந்தாலும் தன்னுடைய யூனிவர்ஸில் லியோ தாஸ் ரெபரன்ஸ் நிச்சயம் இருக்கும் என உறுதிபட கூறி உள்ளார் லோகி.

விமர்சனங்கள் பற்றி லோகேஷ் கனகராஜ் கருத்து

லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிக்கு வந்த விமர்சனம் என்னை மிகவும் பாதித்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை, அதை நான் ஒரு விழிப்புணர்வாக தான் பார்க்கிறேன். அந்த 20 நிமிட பிளாஷ்பேக் காட்சி ஒரு பின்னடைவு தான். ஆனால் அது படத்தின் பிசினஸை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இனிவரும் படங்களில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற பாடத்தை அப்படம் கற்றுக் கொடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.