கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 22ம் தேதி முதலே அனைத்து விதமான படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஏற்கனவே தயாராகி ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனால் சினிமாத்துறை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. சுமார் 600 கோடி ரூபாய் வரை முடங்கியது. 

இதையடுத்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டது. டப்பிங், விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, மிக்ஸிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு 5 பேரை மட்டும் கொண்டு, அரசாங்கம் கூறியுள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடிப்பதாகவும் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும் மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை தொடங்கலாம் என அனுமதி அளித்தது. இதையடுத்து  உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2, த்ரிஷாவின் ராங்கி, விஷாலின் சக்ரா உள்ளிட்ட படங்களில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும் விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட 10 படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாஸ்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் துவங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,  தன்னுடைய கிளாசியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "Go ahead, make my day #MASTER #POSTPRODUCTION' என ஹாஷ் டேக் வெளியிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த படத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சுமார் 10 நாட்களான போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதன் பின்னர் மாஸ்டர் படம் குறித்த அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

View this post on Instagram

Go ahead, make my day ✌🏻#MASTER #POSTPRODUCTION

A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj) on May 15, 2020 at 7:31pm PDT