அவரது தயாரிப்பில் முதல் படமாக வெளிவந்தது  'ஜருகண்டி' . நண்பர் ஜெய் ஹீரோவாக நடித்த இந்தப்படம், திரையரங்குகளில் சுமாராகவே ஓடியது. 
எனினும் மனம் தளராத நிதின் சத்யா, அடுத்து தயாரிக்கும் படம்தான் 'லாக்கப்'. இந்தப் படத்தில் நிதின் சத்யாவின் நண்பர்களான வைபவ் ஹீரோவாக நடிக்க, வில்லனாக இயக்குநர் வெங்கட்பிரபு நடித்துள்ளார். 

அவருக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதின் சத்யாவுக்காக மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கும் வெங்கட் பிரபு, வில்லனாக நடிக்கும் முதல்படம் இதுதான். 
'லாக்கப்' படத்தில், வைபவுக்கு ஜோடியாக 'சின்னத்திரை நயன்தாரா' வாணி போஜன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அவர் அறிமுகமாகிறார். மேலும், பூர்ணா, ஈஸ்வரிராவ், மைம் கோபி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே லாக்கப்புக்காக இணைந்துள்ளனர்.
க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் 'லாக்கப்' படத்தை, புதுமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இவர், ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். 

சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு, அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். ஏற்கெனவே, லாக்கப் படத்தின் ஷுட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், லாக்கப் படக்குழுவிடமிருந்து சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது, படத்தின் டீசர் குறித்த அறிவிப்புதான். வைபவ் - வெங்கட்பிரபு மிரட்டும் 'லாக்கப்' படத்தின் டீசர், நவம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் நிதின் சத்யா அறிவித்துள்ளார். 

அத்துடன், படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
ஹீரோ வைபவ், வில்லன் வெங்கட்பிரபு, ஹீரோயின் வாணிபோஜன் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளிவரும் 'லாக்கப்' டீசர், ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.