ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் 'கலாசல்'.

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரித்த இந்தபடத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக  அறிமுகமானார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகியுள்ளார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்- அஸ்வின் மாதவன்.  இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து, அணைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பின்னரும் ஒரு சில காரணங்களால் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் நடித்த முதல் படம் இன்னும் வெளியாகாத நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, வெள்ளித்திரையில் இருந்து, தற்போது சின்னத்திரைக்கு தாவியுள்ளார். சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பூவே உனக்காக என்கிற சீரியலில் நாயகியாக தான் இவர் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.