”மீ டூ” விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் சுசிகணேசன், நடிகர் அர்ஜூன், என ஒவ்வொரு பிரபலங்களின் மீதும் புகார் கொடுத்து வருகின்றனர் திரைத்துறை பெண் பிரபலங்கள் சிலர். இந்த “மீ டூ”வில் சொல்லப்படும் புகார் எல்லாமே ஆதரமற்றது, பிரபலங்களின் புகழை கெடுப்பதற்கானது என “மீ டு”க்கு எதிராக சிலரும், “மீ டூ” இயக்கத்துக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த “மீ டூ” விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பிரபல நடிகரும் இயக்குனருமான லிவிங்க்ஸ்டன் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஊடகத்துறையை சேந்த பலரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தயங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் இவர் கூறி இருக்கும் சர்ச்சை கருத்துக்கள் தான் தற்போது ஹாட் டாப்பிக்.

எப்போதோ நடந்த சம்பவங்களை பற்றி இப்போ எதுக்கு சொல்லனும்? ஆம்பளைங்கனாலே இது மாதிரி பெண்களை அனுக முயற்சி செய்து தான் பார்ப்பாங்க.அதுக்கு  விருப்பம் இருந்தால் ஒத்துக்கொள்ளட்டும். இல்லைனா வெளிப்படையா மறுத்துட்டு போக வேண்டியது தானே .எதையுமே கட்டாயப்படுத்தினால் தான் தவறு. இதை எல்லாம் பெரிதாக்கலாமா? ஒ ண்ணுமே செய்யாம இருக்க நான் என்ன பொட்டையா என தாறுமாறாக பேசியிருக்கிறார் லிவிங்ஸ்டன். 

மேலும் அவர் ” நானே பல பெண்களிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறேன். திட்டும் வாங்கியிருக்கிறேன் மீடியால இதெல்லாம் சகஜம் என்று கொஞ்சம் ஓவராகவே பேசி இருக்கிறார் லிவிங்ஸ்டன். இதனால் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர் ”மீ டூ” ரசிகர்கள்