வழக்கமான தெலுங்கு சினிமா போல திகட்டும் அளவிற்கு பஞ்சுகள் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்களை அதிகமாக ஈர்த்திருந்தாலும் தி வாரியர் தமிழ் ரசிகர்களிடம் மிதமான வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியானது தி வாரியர். இன்று திரைகண்ட இந்த படத்தில் கீர்த்தி செட்டி, நதியா, ரெடின் கிங்ஸ்லி, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். குரு என்கிற வில்லனாக ஆதி வருகிறார். மதுரையை மிரட்டி வரும் ஒரு தாதா கும்பலை ஒடுக்குவதற்காக மருத்துவராக இருக்கும் ராம் போதினே வில்லனான ஆதியை தாக்குகிறார். பின்னர் விட்டு தப்பி செல்கிறார் நாயகன். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு காவல்துறை அதிகாரியாக அதே ஊருக்கு வருவார் ராம். காவல் துறையதிகாரியாக வரும் நாயகன் எவ்வாறு தாதா கும்பலை அடக்குகிறார் எனபதே படத்தின் முழு கதையாக இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு.. பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த கழுதைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு..."ஆணுறை ஃபேஷன் இல்ல"..தடாலடியாக பேசிய சாய் பல்லவி !
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. கடந்து 2014 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அஞ்சான் படம் இயக்கியிருந்த லிங்கு சாமியின் நீண்ட இடைவெளி படம் இது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. பிரபல இயக்குனரின் ரீஎன்ட்ரி குறித்து ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். பல நடிகர்கள் லிங்குசாமி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். முன்னரே புல்லட் பாடல் மூலம் பிரபலமானது இந்த படம். சிம்பு பாடியிருந்த இந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இந்நிலையில் படம் வரவேற்பை பெற்றதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமான ரவுடி போலீஸ் கதையை சற்று மாறுபாடு செய்து மருத்துவராக இருப்பவர் திடீரென காவல்துறை அதிகாரியாக வந்தால் எப்படி இருக்கும் என சிந்தித்துள்ளார் இயக்குனர்.

தமிழ் சினிமா வரலாற்றை மாற்றாமல் அப்படியே லிங்குசாமி படம் எடுத்துள்ளார். மதுரைக்காரன் என்கிற வசனம் மட்டும் தான் இல்லை எனக் கூறுகிறார்கள் ரசிகர்கள். மதுரை என கூறி ஹைதராபாத்தை பின்னணியாக காட்டியிருப்பது மேலும் சுவாரசியத்தை ஏற்றியுள்ளது. தெலுங்கு சினிமாவிற்கு ஏற்ப கலர்புல்லாக உருவாகியுள்ள இந்த படத்தில் தமிழ் பாணி எங்கே என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆண்ட்ரியாவின் மிரட்டலான போஸ்டருடன்...வெளியானது பிசாசு 2 ரிலீஸ் டேட்!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பாடல்கள் படத்திற்கு கூடுதல் படத்தைக் கூட்டி உள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் இதில் நான்கு பாடல்கள் உள்ளன ஆனால் புல்லட் பாடலை தவிர்த்து மற்றவை போதுமான வரவேற்பு பெறவில்லை என்று கூறலாம். தாதாவாக வரும் ஆதி கருப்பு நிற சட்டையும் கருப்பு நிற வேஷ்டியும் பழைய சினிமா பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான தெலுங்கு சினிமா போல திகட்டும் அளவிற்கு பஞ்சுகள் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு ரசிகர்களை அதிகமாக ஈர்த்திருந்தாலும் தி வாரியர் தமிழ் ரசிகர்களிடம் மிதமான வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
