அப்போ வாணி போஜன்... இப்போ ஐஸ்வர்யா ராஜேஷ் - பிரம்மாண்ட படத்தில் இருந்து நீக்கப்பட்ட நாயகிகள்!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளிவந்துள்ள வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக எஞ்சியுள்ள பணிகளை முடிக்க முடியாமல் கிடப்பில் போட்டனர். இதையடுத்து இப்படம் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் மூலம் மீண்டும் உயிர்பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தில் விக்ரம் ஜோடியாக ரித்து வர்மாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்திருந்தனர். மேலும் ராதிகா சரத்குமார், பார்த்திபன், சிம்ரன், விநாயகன், திவ்ய தர்ஷினி, வம்சி கிருஷ்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். அப்படத்தின் முதல் பாகம் யுத்த காண்டம் என்கிற பெயரில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கும் வர வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... புருஷனுக்காக ஈஸ்வரி எடுக்கும் முடிவு.. அதிர்ச்சியில் ஜனனி! குலுங்கி அழும் குணசேகரன்.. 'எதிர்நீச்சல்' எபிசோட்!
இதனிடையே இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை படக்குழு கத்திரி போட்டு தூக்கிவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருவ நட்சத்திரம் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது. துருவ நட்சத்திரம் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ஒரு மனம் என்கிற பாடலின் வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.
ஆனால் தற்போது அந்த ஒரு மனம் பாடலை படக்குழு மீண்டும் வெளியிட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகளை நீக்கிவிட்டு, விக்ரமும் ரித்து வர்மாவும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விக்ரம் படத்தில் நடித்த நடிகைகள் ஏமாற்றமடைவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னர் மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகளையும் இதேபோல் தான் கத்திரி போட்டு தூக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... முதல் நாளே 3 ஆயிரம் ஷோ... அதுவும் தமிழ்நாட்டில் இல்ல! அக்கட தேசத்தில் அதகளம் செய்ய காத்திருக்கும் விஜய்