மனைவியுடன் சென்னையில் தோனி.. சிறப்பாக வெளியிடப்பட்ட LGM பட ட்ரைலர் - கூர்க் ட்ரிப் போக ரெடியா?
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டார் தல தோனி. இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி கலந்து கொண்டனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனியின் "தோனி என்டர்டைன்மென்ட்" நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ் தமிழ்மணி என்கின்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் LGM என்று அழைக்கப்படும் Lets Get Married.
இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் நாயகியாக இவானா நடிக்க, தாயாக நடிகை நதியா நடித்துள்ளார். யோகி பாபு, தொகுப்பாளர் விஜய் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
காதல் வயப்பட்டு திருமணத்தை நோக்கி நகரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இடையே ஏற்படும் சிறு வாக்குவாதத்தால், காதலனின் தாயை திருமணத்திற்கு முன்பு ட்ரிப் ஒன்றுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் நாயகி இவானா.
அந்த ட்ரிப்பில் அவர்களுக்கு என்ன நடந்தது, இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்த காட்சிகளோடு சொல்ல வரும் திரைப்படம் தான் LGM என்பது, வெளியான ட்ரைலரில் இருந்து தெரியவந்துள்ளது. இன்று மாலை சென்னையில் நடந்த அப்பட நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டார் தல தோனி. இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி கலந்து கொண்டனர்.
சர்ச்சைக்குரிய வீடியோ.. பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அதிரடி கைது! பின்னணி என்ன?