less food in big boss
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாப்பாடு பத்தவே இல்லை குறைவாக கொடுக்கிறார்கள் அதனால் அமைதியாக இருக்கிறேன் அதை நேர்மையற்றவன் என்று சொல்வதா என்று சொல்வதா என சுப்ரமணியபுரம் பரணி ஆவேசமாக கேட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விருது வழங்கப்பட்டதில் பரணிக்கு நேர்மையற்றவர் என விருது வழங்கப்பட்டது. இதற்கு பிக்பாஸ் தலைவர் சினேகன் கூறிய காரணம் அவர் யாரோடும் நெருங்கி பழகாமல் தனித்து இருக்கிறார்.
அதனால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறேன் என்று தெரிவித்தார். நேர்மையற்றவன் என்ற விருதில் கைவிலங்கு சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்த பரணி கடுப்பாகி நான் நேர்மையற்றவன் என்று அண்ணன் எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

அவருக்கு நான் நேர்மையற்றவன் என்பது தெரிந்துள்ளது , என்னைப்பொறுத்தவரை நான் நன்றாக சாப்பிடுவேன் ஆனால் இங்கு எனக்கு சாப்பாடு குறைவாக கிடைக்கிறது அதனால் நான் கேட்டு எதுவும் பிரச்சனை ஆகிவிடப்போகிறது என்று சும்மா இருக்கிறேன் .
யாரிடமாவது பேசினால் வம்பாகிவிடும் என்பதால் அமைதியாக இருப்பதை நேர்மையற்றவன் என்பதா என வருத்தத்துடன் கேட்டார்.
