Leo Movie: கேரளாவில் 'லியோ' பீவர்... ரிலீசுக்கு முன்னர் பரபரப்பாக நடக்கும் பணிகள்! வைரல் வீடியோ..!

'லியோ' படத்தை வரவேற்க கேரளாவில், பிரமாண்ட பேனர்கள் சாலைகளில் வைக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

leo movie Kerala promotion new video goes viral mma

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறிக்கொண்டே உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க படத்திற்கான விளம்பரத்திலும், படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 'லியோ' படத்தின் பேனர்கள், போஸ்டர்கள், பிரம்மாண்ட கட்டவுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களும் தங்களுடைய பங்கிற்கு போட்டி போட்டுக்கொண்டு விஜயின் போஸ்டர்களை தெருத்தெருவாக ஒட்டி வருகின்றனர். மேலும் லியோ திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பான் -இந்தியா படமாக ரிலீசாக உள்ளதால், அனைத்து மாநிலங்களிலும் லியோ படத்திற்கான பணிகள் அனல் பறக்க நடந்து வருகிறது.

leo movie Kerala promotion new video goes viral mma

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதிலும் குறிப்பாக கேரளாவில் தளபதிக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக உள்ளனர்.ஒருபுறம் தளபதி ரசிகர்கள், போஸ்டர்கள் ஓட்டிவர, மற்றொரு புறம் படக்குழுவினரும் படத்தை தாறுமாறாக புரோமோட் செய்து வருகிறார்கள். மலையாள திரையுலகில்... லியோ பீவர் ஹெவியாக அடிக்கும் நிலையில், ரசிகர்கள் பிரமாண்ட பேனர் வைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

leo movie Kerala promotion new video goes viral mma

Bigg Boss Arav: இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக்பாஸ் ஆரவ்!! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு பிரமாண்டமாக உருவாக்கி உள்ள லியோ படத்தில், தளபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios