Leo Box Office: சூப்பர் ஸ்டார்னா சும்மாவா? 12 நாளில் ஜெயிலர் வசூலை பீட் பண்ண முடியாமல் பார்டரில் நிற்கும் லியோ

லியோ திரைப்படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவலை தற்போது, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

Leo 12th day box office details officially announced mma

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் அசால்டாக 1000 கோடி வசூல் செய்யும் என, ஆர்ப்பரித்த ரசிகர்களின் கனவை அசைத்து பார்த்துவிட்டது இப்படத்திற்கு கிடைத்த விமர்சனம். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான நிலையில், வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது.

முதல் நாளில் இப்படம், 145 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், ஒரே வாரத்தில்.. சுமார் 461 கோடி வசூலித்ததாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அதிகார பூர்வமாக அறிவித்தது. இதை தொடர்ந்து வெற்றிகரமாக பல திரையரங்குகளில் லியோ ஓடிக்கொண்டிருந்தாலும், திரையரங்குகளில் கூட்டம் குறைந்து, வசூலும் டல் அடித்து வருகிறது.

Leo 12th day box office details officially announced mma

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் சற்று முன்னர் செவென் ஸ்கிரீன் நிறுவனம் 12 நாட்களில், உலகம் முழுக்க 'லியோ' எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிவித்துள்ளது. அதன்படி, 540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 'ஜெயிலர்' திரைப்படம் 12 நாட்களில் சுமார் 550 கோடி வசூலித்த நிலையில், லியோ வசூலில் 10 கோடி பின்தங்கி உள்ளது. ஏற்கனவே விஜயின் லியோ மற்றும் தலைவரின் ஜெயிலர் படத்தின் வசூலை ஒப்பிட்டு பேசி வரும் ரசிகர்கள் இந்த தகவலை தற்போது ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பேசிவருகிறார்கள்.

 

 

லியோ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், ஜனனி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Shimona: நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஷிமோனா! குவியும் ரசிகர்கள் வாழ்த்து.!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios