ரஜினியின் சிவாஜி பட ஸ்டைலில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விவேக்கை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியும் உள்ளனர்.
தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக விளம்பரங்களில் தோன்றிய இவர் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். அஜித்தின் உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து மூன்றாவது படமாக தி லெஜண்ட் படத்தை உருவாக்கி வருகின்றனர்..இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து இருக்கிறார்.

முக்கிய வேடத்தில் விவேக், ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே மே 29-ந் தேதி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய 10 பேர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வெளிநாட்டில் விஞ்ஞானியாக இருக்கும் லெஜண்ட் சரவணன் இந்தியாவில் உலக சாதனை செய்வதற்காக வருகிறார். பின்னர் எதிரிகளின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளும் நாயகன் அவரது தோழன் விவேக்குடன் இணைந்து எதிரிகளை கண்டுபிடிக்கும் முயல்கிறார். பிரமாண்டமாக வெளியாகியுள்ள ட்ரைலர் இதோ...

