மீடூ விவகாரம்... லீனா மணிமேகலை தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரம்! நீதிபதி அதிரடி தீர்ப்பு!!
கவிஞர் லீனா மணிமேகலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
கவிஞர் லீனா மணிமேகலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
'காளி' என்கிற ஆவணப்படத்தை எடுத்து, இந்திய முழுவதும் மிகப்பெரிய சர்ச்சைக்கு வித்திட்டவர் கவிஞர் லீனா மணிமேகலை. இவர் இயக்கியுள்ள 'காளி' என்கிற ஆவணப்படத்தின் போஸ்டரில், காளி வேடமிட்ட பெண் ஒருவர் கையில் LGBT கொடி மற்றும் வாயில் சிகரெட் உடன் போஸ் கொடுத்திருந்த புகைப்படம் இடம்பெற்று இருந்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கியது மட்டும் இன்றி, பல்வேறு இடங்களில் இவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டது.
மேலும் செய்திகள்: லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' ட்ரைலர்!
இந்நிலையில் இவர் இயக்குனர் சுசி கணேசன் மீது கொடுத்த மீடூ புகார் பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, திரை துறையை சேர்ந்தவர்கள், மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர், சமூக வலைத்தளம் மூலம், தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து 'மீடூ' என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து கொண்டனர். அப்போது மிகவும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்ட நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது 'மீடூ' புகார் அளித்திருந்தார்.
மேலும் செய்திகள்: முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
லீனா மணிமேகலை பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாக கூறி, இயக்குனர் சுசி கனெக்ஷன் சென்னை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு விசாரணை நடைமுறையில் தவறு இருப்பதாக கூறி வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றி உத்தரவிட கோரி லீனா மணிமேகலை தரப்பில் இருந்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், லீனா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது .
இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது, சுசி கணேசன் தரப்பில் இருந்து... லீனா மணிமேகலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை இழுத்தடித்து வருவதாகவும், எனவே நான்கு மாதத்தில் இந்த வழக்கை நான்கு மாதத்தில் முடிக்க வேண்டும் என கூறி, சுசி கணேசன் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில், டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்தியா பாதுகாப்பு இல்லாத நாடு என்றும், இந்திய சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும் லீனா மணிமேகலை கூறியதும் சுட்டி காட்டப்பட்டது. மேலும் நீதிமன்றம் சம்மன் அனுப்பினால் கூட லீனா மணிமேகலை ஆஜராக மாட்டார் என்றும், வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக லீனா மணிமேகலை தனது தம்பி பெயரில் பிரமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: Exclusive Photos: நான் தமிழன்டா.. ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து கெத்து காட்டிய தனுஷ்!