பிரபல கவிஞர்ரும் குறும்பட இயக்குனருமான லீலா மணிமேகலை, முதல் முறையாக ஒரு இளம் இயக்குனரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக பட நேர்ந்தேன் என மனம் திறந்துள்ளார்.

கடந்த 2014 ஆண்டு ஒரு இளம் இயக்குனரை நேர்காணல் செய்ய நேர்ந்ததாகவும், நேர்காணல் முடிய இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. 

பின் ஆட்டோவிற்காக சாலையில் நின்றுகொண்டிருந்த போது அந்த இளம் இயக்குனரின் கார் தன்னை நோக்கி வந்தது. நீங்கள் எங்கு செல்ல வேண்டும் வாங்க நான் ட்ராப் செய்கிறேன் என சகஜமாக கூறியதும் அவரை நம்பி காரில் எறியதாக கூறியுள்ளார் லீலா .

சிறிது நேரம் நன்றாக பேசியபடி இருந்த அவர் திடீர் என தனது கைபேசியை பிடுங்கிய ஆப் செய்து காரின் பின் புறத்தில் வீசினார். வெலவெலத்து போன நான் சத்தம் போடுவேன் என கூறியும் அவர் சிறிதும் பயம் இல்லாமல் காரின் கண்ணாடிகளை லாக் செய்து விட்டார் .

அப்போது அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றியது, நான் கல்லூரி தினங்களில் இருந்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி தான் என கூறியுள்ளார்.

நான் கோபத்தோடு குத்திவிடுவேன் என சொன்னதும் அவர் தன்னை காரில் இருந்து இறக்கி விட்டு தன்னுடைய கைப்பேசியையும் தேடி கொடுத்தார் என தற்போது மனம் திறந்துள்ள லீலா மணிமேகலை இதை தன்னால் முன்பு சொல்ல முடிய வில்லை என வேதனையோடு கூறியுள்ளார்.

காரணம் சினிமா துறை வேண்டாம் என கூறிய தன்னுடைய குடும்பத்தினர் மீதும் சினிமா பயணத்தை தொடர விட மாட்டார்கள், அந்த சமயத்தில் நான் ஒரு இயக்குனராக வளர்ந்து வந்த தருணம் இதனை வெளியில் சொன்னால் என்னுடைய இயக்குனர் கனவும் சிதைக்கப்படும், அதனால் தான் அமைதியாக இறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் ஓர் பிரபல நாயகியாக இருந்தும் தற்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ள பாவனாவின் தைரியத்தை தான் பாராட்டுவதாகவும், அவருக்கு தோல் கொடுத்து நீதிக்காக போராடுவேன் என கூறியுள்ளார்.