தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக காலடி எடுத்து வைத்து, தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி அனைவர் மனதிலும் நல்ல மனிதர் என்கிற முத்திரையை பதித்தவர் நடிகர் ராகவா  லாரன்ஸ்.  

இவர் முதன் முதலாக திரையில் தோன்றியதே அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் தான். அந்த வாய்ப்பை இவருக்கு கொடுத்தவர் நடிகர் அஜித் என பல முறை பல மேடைகளில் லாரன்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் அஜித் தற்போது நடித்து வெளிவந்துள்ள விவேகம் படம் குறித்து பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஒரு சிலர்  அஜித் மீதுள்ள வன்மத்தை தீர்ப்பது போல் விமர்சித்தனர். இதற்கு ராகவா லாரன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அஜித்துக்காக வரிந்துக்கட்டியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "நானும் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை பார்த்தேன்... படக்குழுவினருக்கும்  அஜித்தின் கடுமையான உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன்" அதே போல பலர் இந்த படத்தை பற்றி பல்வேறு  கருத்துக்களை தெரிவித்துவந்தனர் என கூறி நீலநிற சட்டையில் பிரபலமான ஒருவரை பற்றியும் கூறியுள்ளார்.  இதோ லாரன்ஸ் போட்ட ட்விட்...