நடிகர், நடன இயக்குனர் போன்ற பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்கவும் , தன்னுடைய கலாச்சார சின்னமாக விளங்கும் காளைகளை காக்கவும் சாலையில் இறங்கி போராடினார். அதே போல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்காக ஒரு கோடி வரை தன்னுடைய பணத்தை செலவும் செய்தார்.
மேலும் இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பொது மக்களுக்கும், குழந்தைகள் சிகிச்சைக்காகவும் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்கு கிடைத்த வெற்றியை பிரமாண்டமாக கேக் வெட்டி மாணவர்களுடன் கொண்டாடியவர் மனதை உருக்கும் வகையில் ஒரு சில வார்த்தைகளை பேசினார்.
அவர் பேசியது... நான் ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் பணம் வாங்கியதாக சிலர் கூறுகின்றனர், மேலும் அது ஒரு கட்சிக்கு நான் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார்கள்.
நான் எந்த கட்சிக்காவது ஆதரவு தெரிவித்தேன் என்று நீங்கள் நிரூபியுங்கள், நான் தமிழகத்தை விட்டே செல்கிறேன், எனக்கு அரசியல் வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார். இந்த மாணவர்கள் போதும் என கூறினார் .
ஒருமுறை தேவைப்பட்டால் நான் அரசியலுக்கு வர தயார் என லாரன்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.
