நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது தனது உடல்நலம் சரியில்லாத போதிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணச்சிக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டு தடை நீங்குவதற்கு தொடர்ந்து 6 நாட்கள் போராடினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை தன்னால் முடிந்த வரை வழங்கினார். 

இறுதிவரை போராட்டத்தில் கலந்துகொண்டவர் கடைசி நேரத்தில் கலவரம் வெடித்ததால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார். 

தற்போது ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுடன் சேர்ந்து போராடிய மீனவர்களுக்காக குரல் கொடுத்து, அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை உதவிகள் செய்துள்ளார்.

இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் வீர விளையாட்டை மீட்க குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாய் தன் கருத்துகளை வெளியிட்டதோடு தன்னை பல டிவி நிகழ்ச்சிகளில் நேர்காணலுக்கு அழைக்கும் ஊடகங்கள் மாணவர்களையும் கூப்பிடுங்கள் என கூறியுள்ளார்.

நானும் அவர்களோடு ஒருவனாய் கலந்துகொள்கிறேன் என சாட்டையடி பதில் கொடுத்துள்ளார் லாரன்ஸ் , இதுவே அவர் ஒரு ரியல் ஹரோ என காட்டுகிறது. 


அவர் கூறியுள்ள கருத்துக்கள் இதே....
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி, இணையதள, பண்பலை நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ் சமுதாயம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
வயது, ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் அந்த வெற்றியை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
சில பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணையதளம்,பண்பலை மற்றும் ஊடக நண்பர்கள் அந்த வெற்றி சம்மந்தமாக பேட்டி, நேர்காணல், விவாத நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். இந்த வெற்றி முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ந்தது. தயவு செய்து மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழையுங்கள். அவர்களோடு நானும் ஒருவனாகக் கலந்து கொள்கிறேன். என்னை மட்டும் அழைப்பது நியாயமாக இருக்காது என்பதை நான் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவா லாரன்ஸ்