நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு வெற்றியை பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் இனி மாணவர்கள் முன்னேற்றத்திற்காக தேவை ஏற்பட்டால் அரசியலில் குதிகவும் தயார் என கூறி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் ஒரு சில பத்திரிகையாளர்கள் ராகவா லாரன்ஸை சீண்டி பார்க்கும் வகையில் அவர் கோபப்படும்படியான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

முடிந்தவரை பொறுமையாக இருந்த லாரன்ஸ் திடிரென்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோபமாக பொங்கி எழுந்தார். 

மேலும் இந்த போராட்டத்துக்காக இளைஞர்களுடன் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் தெரியுமா, என் மனைவி, அம்மா செயினை அடகு வெச்சு போராட்டம் நடத்திருக்கிறேன் என உணர்ச்சி பொங்க பேசினார்.

அதே போல கடந்த 10 வருடங்களாக யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து பல நல்ல விஷயங்களை செய்து வருகிறேன். நீங்கள் கேட்கும் கேள்வியெல்லாம் ரொம்ப தப்பாக இருக்கிறது என்று கோபப்பட்டு பேசினார்.